அஜித்தின் சூப்பர் ஹிட் படம் இரண்டாம் பாகம் ரெடி, தல சம்மதிப்பாரா?

தல அஜித் நடிப்பில் தற்போது தல-57 பிரமாண்டமாக உருவாகி வருகின்றது. இப்படத்தை தொடர்ந்து அஜித் யார் இயக்கத்தில் நடிப்பார் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

பலரும் முருகதாஸ் அல்லது விஷ்ணுவர்தன் இவர்களில் யாராவது ஒருவர் தான் அஜித்தை இயக்குவார்கள் என கூறுகின்றனர்.

இந்நிலையில் சிட்டிசன் படத்தின் இயக்குனர் சரவணன் சுப்பையா ‘என்னிடம் சிட்டிசன் படத்தின் இரண்டாம் பாகம் ரெடியாக உள்ளது, தல சம்மதித்தால் படப்பிடிப்பு செல்லலாம்’ என கூறியுள்ளார்.

சிட்டிசன் திரைப்படம் அஜித் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம் மட்டுமின்றி, வசூலிலும் சாதனை படைத்தது.