ரஷ்யா மீது நடவடிக்கை எடுக்கப்படும்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் குறுக்கிட்டதற்காக ரஷ்யா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.

அமெரிக்காவுக்கு எதிரான இணையத் தாக்குதலில் புட்டின் நேரடி தொடர்பு கொண்டிருந்தார் என அமெரிக்க உளவுத்துறை சந்தேகிப்பதாக அந்நாட்டு ஊடகம் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தது.

அந்தக் குற்றச்சாட்டை ரஷ்யா தொடர்ந்து மறுத்துவருகிறது.

அடுத்த மாதம் பதவியேற்கவிருக்கும் திரு டோனல்ட் டிரம்ப்பும் ரஷ்யா மீது சாட்டப்பட்டிருக்கும் குற்றச்சாட்டை உதறித்தள்ளியுள்ளார்.

ரஷ்யா இணைய ஊடுருவலில் ஈடுபட்டது உண்மையென்றால், ஏன் இவ்வளவு காலம் நடவடிக்கை எடுக்காமல், தேர்தலில் ஹில்லரி தோல்வியுறும்வரை வெள்ளை மாளிகை காத்திருந்தது என டிவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார் டிரம்ப்.