இனி ஜெயலலிதா படம் இல்லை! சசிகலா தான்

2017க்கான தினசரி காலண்டரில் ஜெயலலிதா படத்துக்கு பதில் சசிகலா நடராஜன் புகைப்படத்தை அச்சடிக்க அதிமுகவினரிடம் இருந்து அதிக ஆர்டர் வருவதாக காலண்டர் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

கலர் காலண்டர் தயாரிப்பதில் தமிழகத்தில் சிவகாசி மாவட்டம் முதலிடம் வகிக்கிறது.

பெரும்பாலான அரசியல் கட்சிகள் தங்கள் தலைவர்கள் புகைப்படங்களுடன் கூடிய காலண்டரை இங்கு தான் அச்சடிப்பார்கள்.

அதிமுக கட்சி 2017 காலண்டரில் இதுவரை இல்லாத ஒரு புதிய விடயம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து காலண்டர் தயாரிப்பாளர் ஒருவர் கூறுகையில், 25000க்கும் மேற்பட்ட ஜெயலலிதா புகைப்படம் பொறித்த காலண்டர் ஆர்டரை பல எம்.எல்.ஏக்களும், சில அமைச்சர்களும் கடந்த நவம்பர் மாதத்தில் கொடுத்தனர்.

கடந்த 5ஆம் திகதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலமான பின்னர் அதிமுக முக்கிய புள்ளிகளில் பலர் போன் செய்து ஜெயலலிதா படத்தை சிறிய அளவிலும், சசிகலா நடராஜன் புகைப்படத்தை பெரிய அளவிலும் போட்டு காலண்டர்களை பிரிண்ட் செய்ய சொல்லி கேட்டுள்ளார்கள்.

ஏற்கனவே ஜெயலலிதா படத்தை போட்டு வேலையை ஆரம்பித்து விட்டதால் தற்போது அதை மாற்றும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம் என கூறியுள்ளார்.