எச்சரிக்கை…! உயிரை காவும் நோய் இலங்கையில்! 30 ஆயிரம் பேர் பரிதாபச்சாவு!

அநுராதபுரம் மாவட்டத்தில் லிஷ்ம நைஸ் எனும் ஒருவித தோல்நோய் தாக்கத்தின் காரணமாக அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமத்திய மாகாண சுகாதார சேவை அதிகாரி ஹேமோ வீரகோன் இதனை தெரிவித்துள்ளார்.

குறிப்பாக 2010ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு காலப்பகுதியில் அதிகளவான மக்கள் இந்த நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் முதல் தடவையாக 1992ஆம் ஆண்டு லிஷ்ம நைஸ் நோய் வடமாகாணத்தில் ஹம்பலான்தொட பகுதியில் தொற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எனினும், இதனை அறிந்துகொண்டு மக்கள் உரிய சிகிச்சை பெற்றுக்கொள்வதில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை, லிஷ்ம நைஸ் எனும் இந்த நோய் 98 நாடுகளில் பரவியுள்ளதாகவும், இந்த நோயினால் உலகம் முழுவதும் 14 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இந்த நோய் தாக்கம் காரணமாக ஆண்டு தோறும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பதாக தெரிவித்து உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

எனவே, இது போன்ற தோல் நோய் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக வைத்தியரை அனுகி உரிய சிகிச்சையின் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.