மெஸ்ஸிக்கு அடுத்த ஆண்டு டும் டும் டும்!

உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களின் ஒருவரான அர்ஜென்டீனாவை சேர்ந்த லியோனல் மெஸ்ஸிக்கு அடுத்த ஆண்டு திருமணம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

மெஸ்ஸியின் நீண்ட நாள் துணைவியான அன்டோனெல்லா ரோக்குஸ்ஸுவை அவர் மணக்கவுள்ளார். திருமணம் மெஸ்ஸியின் சொந்த ஊரில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், போட்டிகள் குறித்து ஆலோசனை நடந்த பின் திகதி உறுதிசெய்யப்பட்டு வெளியிடப்படும் என உள்ளுர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

1996ம் ஆண்டு முதல் பழகி வந்த மெஸ்ஸி, அன்டோனெல்லா கடந்த 2008ம் ஆண்டு முதல் ஒன்றாக வாழ தொடங்கினர்.

இந்த ஜோடிக்கு நான்கு வயதில் Thiago மற்றும் ஒரு வயதில் Mateo என இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது நினைவுக்கூரத்தக்கது.

அன்டோனெல்லா, மெஸ்ஸியின் சக வீரரும் நெருங்கிய நண்பருமான Lucas Scagliaவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.