யாழ்.பொது நூலகத்தில் அடாவடி புரிந்த நபர் மடக்கிப்பிடிப்பு!

யாழ்.பொது நூலகத்தில் கண்ணாடியை உடைத்து புத்தகங்கள் மேசை, கதிரை என்பவற்றினை சேதப்படுத்தி அங்கிருந்த வாசகர்களையும் தாக்க முற்பட்ட நபர் ஒருவரை அங்கிருந்த இளைஞர்கள் மடக்கிப்பிடித்து யாழ்ப்பாணப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று மாலை 4.30 மணியளவில் யாழ்ப்பாண பொது நூலகத்தின் இந்தியன் கோணர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.யாழ்.பொது நூலகத்திற்கு வாடிக்கையாக வரும் வாசகர் ஒருவரே மேற்படி தகாத முறை யில் நடந்துகொண்டுள்ளார்.

ஏனைய வாசகர்களோடு ஏற்பட்ட கருத்து முரண்பாடோ அல்லது தூண்டுதலின் பேரிலோ மேற்படி அசம்பாவிதம் இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுதொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.