முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வெளியாகும் இந்து பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இளம் வாக்காளர்கள் முன்னாள் ஜனாதிபதியுடன் இல்லை என சுட்டிக்காட்டியுள்ள பிரதமர்இ முன்னாள் ஜனாதிபதி வாக்கு வங்கி குறைந்து வருவதாகவும் கூறியுள்ளார்.
தேசிய அரசாங்கத்தின் கொள்கைகள் வெற்றியடையும் போது மகிந்த ராஜபக்ச தோல்வியான தலைவர் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்.
மக்கள் மாற்றம் ஒன்றை செய்த பின்னர் மீண்டும் பழைய நிலைமைக்கு செல்ல மாட்டார்கள். மக்களுக்கு மாற்றம் தேவையெனில் அவர்கள் புதிய ஒன்றை குறித்து சிந்திப்பார்கள் என பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.







