டெஸ்ட்டில் வெஸ்ட்இண்டீஸ் சாதிப்பது கடினம்: கிறிஸ் கெய்ல்

வெஸ்ட்இண்டீஸ் அணியில் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ்கெய்ல். அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட ஊதிய பிரச்சினை மற்றும் கருத்து வேறுபாடு காரணமாக அவரை அணிக்கு தேர்வு செய்யாமல் ஒதுக்கி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் கிறிஸ் கெய்ல் அளித்த ஒரு பேட்டியில், வெஸ்ட்இண்டீஸ் அணி முன்பு டெஸ்ட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தியது போல் இப்போது சாதிப்பது கடினம்.

தற்போது இளம் வீரர்கள் 20 ஓவர் போட்டியில் தான் கவனம் செலுத்துகிறார்கள். டெஸ்ட் போட்டியில் சாதிக்க நிறைய கவனம் செலுத்த வேண்டும். அப்போது தான் சிறப்பாக விளையாட முடியும்.

வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட்டை முன்னேற்ற ஒவ்வொருவருக்கும் பங்கு இருக்கிறது. ஒவ்வொரு வீரரும் வெஸ்ட்இண்டீசுக்காக விளையாடவே விரும்புகிறோம்.