பல் வலியில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும் சில இயற்கை வைத்தியங்கள்!

நம் வாழ்நாளில் ஒருமுறையாவது பல் வலியால் அவஸ்தைப்பட்டிருப்போம். அக்காலத்தில் பல் வலி வந்தால், அதனைப் போக்குவதற்கு பல் மருத்துவர்கள் இல்லை. மாறாக நம் முன்னோர்கள் இயற்கை வைத்தியங்களைக் கொண்டு தான் தங்களின் பல் வலியைப் போக்கினார்கள்.

தற்போது பல் மருத்துவர்கள் இருந்தாலும், பலரும் பல் மருத்துவரிடம் செல்ல பயந்து செல்லாமல் இருப்போம். நீங்களும் பல் மருத்துவரிடம் செல்ல பயப்படுபவராக இருந்தால், பல் வலியை வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே வைத்தியம் பார்த்து சரிசெய்து கொள்ளுங்கள்.

சரி, இப்போது தாங்க முடியாத பல் வலியில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும் சில இயற்கை வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன

கிராம்பு 

பல் வலி கடுமையாக இருந்தால், அதனை உடனடியாக போக்க சமையலறையில் இருக்கும் ஒரு கிராம்பை எடுத்து, வலியுள்ள பல்லின் மீது வைத்து, கடித்துக் கொண்டு இருக்க வேண்டும். இதனால் கிராம்பில் உள்ள மருத்துவ குணம், பல் வலியைப் போக்கும்

புதினா 

புதினாவும் பல் வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும். இதற்கு அதில் உள்ள உணர்ச்சியற்றதாக்கும் மற்றும் அமைதிப்படுத்தும் பண்புகள் தான் காரணம். எனவே பல் வலி இருக்கும் போது, புதினாவை பல் வலி உள்ள இடத்தில் வைத்து கடித்துக் கொள்ளுங்கள்.

பூண்டு 

பூண்டில் ஆன்டி-பயாடிக் உள்ளது. இது பற்களைத் தாக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கும். எனவே பல் வலி இருக்கும் போது, ஒரு பூண்டு பல்லை அரைத்து, உப்பு சேர்த்து, வலியுள்ள இடத்தில் தடவ வேண்டும். இன்னும் சிறப்பான பலன் கிடைக்க, பூண்டு பல்லை பல் வலி உள்ள இடத்தில் வைத்து கடித்தவாறு இருக்க வேண்டும். இதனாலும் பல் வலி நீங்கும்.

மிளகு மற்றும் உப்பு 

மிளகில் ஆன்டி-பாக்டீரியல், அனல்ஜெசிக் மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருட்களும் உள்ளது. அத்தகைய மிளகுப் பொடியுடன் உப்பு சிறிது சேர்த்து, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, வலியுள்ள பல்லின் மீது தடவினால் 2 நிமிடத்தில் பல் வலி போய்விடும்.

கொய்யா இலை 

கொய்ய இலையில் ஆன்டி-மைக்ரோபியல், அழற்சி எதிர்ப்பு பொருள் மற்றும் உணர்ச்சியற்றதாக்கும் பண்புகள் உள்ளது. எனவே பல் வலி இருக்கும் போது, கொய்யா இலையை வாயில் போட்டு மெல்ல வேண்டும். இல்லாவிட்டால், சிறிது கொய்யா இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அத்துடன் சிறிது உப்பு சேர்த்து, தினமும் இந்நீரைக் கொண்டு வாயைக் கொப்பளிக்க, பல் வலி வருவது தடுக்கப்படும்.

ஆல்கஹால் 

ஆல்கஹாலை பஞ்சுருண்டையில் நனைத்து, வலியுள்ள பல்லின் மீது வைத்தால், தற்காலிகமாக பல் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

வென்னிலா எக்ஸ்ட்ராக்ட்  

வென்னிலா எக்ஸ்ட்ராக்ட்டை பஞ்சுருண்டையில் நனைத்து, வலியுள்ள பல்லின் மீது வைத்து கடித்துக் கொள்ள வேண்டும். இதனாலும் பல் வலியில் இருந்து விடுபடலாம்