கனடாவின் புதிய பணத்தாளை மகிமைப்படுத்தும் பெண்!

கனடாவின் புதிய 10 டொலர் பணத்தாளில் வயலா டெஸ்மொன்ட் தோன்றுவார் என நிதி அமைச்சர் பில் மோர்னியு தெரிவித்துள்ளார்.

வயலா டெஸ்மொன்ட்-அடிக்கடி கனடாவின் Rosa Parksஎன வர்ணிக்கப்படும்-1946-ல் நோவ ஸ்கோசியாவில் திரையரங்கு ஒன்றில் வெள்ளையர்களிற்கு-மட்டும் என்ற பகுதியில் அமர்வதற்கு தீர்மானித்த காரணத்தால் இவ்வாறு வர்ணிக்க பட்டவர்-கனடிய பணத்தாள் ஒன்றின் முகத்தில் இடம்பெற போகும் முதலாவது பெண்ணாக போகின்றார்.

கனடிய வங்கி மற்றும் மத்திய நிதி அமைச்சர் ஆகியோர் கனடிய பெண்மணி ஒருவர் நாட்டின் அடுத்த பணத்தாளின் முன்பக்கத்தை மகிமை படுத்துவார் என்ற தகவலை இன்று அறிவிக்க உள்ளனர்.

இந்த கௌரவத்திற்காக ஐந்து செயல் திறனாளர்கள் தெரிவாகினர். வயலா டெஸ்மொன்ட், கவிஞர் எமிலி பொலின் ஜோன்சன் பொறியியலாளர் எலிசபெத் மக்கில், உடற்பயிற்சி நிபுணர் Fanny (Bobbie) Rosenfeld மற்றும் மகளிர் வாக்குரிமைக்காக போராடிய Idola Saint-Jean.

கிடைக்க பெற்றிருந்த 26,000ற்கும் மேற்பட்ட பொது சமர்ப்பிப்பின் பின்னர் இவர்களில் இருந்து கனடிய குடியுரிமையாளர் மற்றும் குறைந்தது 25ஆண்டுகளிற்கு முன்னர் இறந்தவர் வரிசையில் 461ஆக குறைக்கப்பட்டது.

நீண்ட பட்டியல் பின்னர் 12ஆக குறைக்கப்பட்டு அதிலிருந்து ஐவர் தெரிவாகினர்.ஐவரிலிருந்து Viola Desmond, 1914-1965 தெரிவானார். 2018ல் வெளிவரும் கனடாவின் புதிய நோட்டின் முன்பக்கத்தில் தெரிவான பெண் தோன்றுவார்.

1946ல் Nova Scotia சினிமா தியேட்டரில் வெள்ளை இனத்தவர்களிற்காக ஒதுக்கப்பட்ட பகுதியில்- கறுப்பு இனத்தவரகளிற்காக ஒதுக்கப்பட்ட பல்கனியை விட்டு-அமர்ந்ததற்காக கைதானார்.

இவர் மீது ஒரு சத வரி ஏய்ப்பு குற்றம் சுமத்தப்பட்டது. இரவு முழுவதும் சிறையிலடைக்கப்பட்டார். குற்றத்திற்காக 26டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. இவரது வழக்கின் இனபாகுபாட்டிற்கு எந்த வித ஒப்புகையும் வழங்கப்படாத நிலையில் 1965ல் காலமானார்.canada-money

canada-mo