அமைதிக்கான நோபெல் பரிசைப் பெற்றுள்ள கொலம்பிய அதிபர்

கொலம்பிய அதிபர் ஜுவான் மானுவேல் சந்தோஸ் (Juan Manuel Santos) அமைதிக்கான நோபெல் பரிசைப் பெற்றுக்கொண்டுள்ளார். நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில் அவருக்குப் பரிசு வழங்கப்பட்டது.

FARC போராளிகள் என்றழைக்கப்படும் கொலம்பியாவின் புரட்சி ஆயுதப் போராளிக்குழுவினர் கடந்த 52 ஆண்டாக அங்கு மோதல்களில் ஈடுபட்டனர். அந்த மோதல்களில் பலியானவர்களுக்குத் தமது நோபெல் பரிசை அதிபர் சந்தோஸ் அர்ப்பணித்தார்.