மக்களின் பிரச்சினைகளுக்காக வளைந்து கொடுக்க வேண்டும் – ஜனாதிபதி

சட்டம் மற்றும் அதிகாரம் எந்த வகையில் இருந்தாலும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை தேடும் போது சகலரும் வளைந்து கொடுக்கும் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

திட கழிவுகள் முகாமைத்துவம் தொடர்பில் அதனுடன் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் இன்று(07) நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

அதிகாரம் தற்காலிமானது என தெரிவித்துள்ள ஜனாதிபதி, நலன்புரி சேவைகளுக்காக முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கே எப்போதும் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

முழு நாட்டுக்கும் தற்போது பொது பிரச்சினையாக மாறியுள்ள திட கழிவு முகாமைத்துவம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வை தேடும் போது, தமக்குரிய அமைச்சு மற்றும் நிறுவனங்களுக்கு இருக்கும் அதிகாரங்களை மக்களின் நலனுக்காக வளைந்து கொடுக்கும் தன்மையில் பயன்படுத்துவது அனைவரது பொறுப்பாகும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.