ஜெயலலிதா விஷம் வைத்து கொல்லப்பட்டாரா? வெளியான அதிர்ச்சி தகவல்… தெளிவாக விவரிக்கும் செவிலியர்கள்!..

தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா மிக நன்றாக இருந்தவர் 2மாதங்களுக்கு முன்பு திடீரென இரவோடு இரவாக மருத்துவமனையில் மர்மமாக அனுமதிக்கப்பட்டார்.

சாதாரண காய்ச்சல் தான் 2 நாட்களில் வீடு திரும்புவார் என தகவல் வெளியானது. தினம், தினம், ஒவ்வொரு நோய்க்கு சிகிச்சை அளிப்பதாக மாறி, மாறி அறிவிப்பு.

3மாதம் ஆனபோதும் கூட எவரையும் பார்க்க கடைசிவரை அனுமதிக்கவில்லை. இது யாருடைய உத்தரவு?? 3 மாதம், கட்சி, மற்றும் அரசு யாருடைய கட்டுப்பாட்டில் இயங்கியது?

அனைத்தும் சரியாகிவிட்டது சராசரி உணவை சாப்பிட தொடங்கி சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு விட்டார் 2நாளில் நலமுடன் வீடு திரும்பவுள்ளார் என்று சொன்னீர்களே…??

கடைசி வரை சிகிச்சை எடுக்கும் ஒரு புகைப்படம் கூட வெளியிடவில்லையே ஏன்? ஜெயலலிதா மறைவில் புதைந்திருக்கும் அந்த மர்மம் என்ன?.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் உடல்நலன் தேறி சிறப்பு பிரிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் அதாவது நவம்பர் 19ம் திகதி சி.வி.ஷீலா, எம்.வி.ரேணுகா, சாமுண்டீஸ்வரி உள்பட 16 செவிலியர்கள் உறுதுணையாக இருந்தனர்.

அப்போது நடந்தவற்றை உருக்கத்துடன் விவரிக்கின்றனர் செவிலியர்கள். உலகமே அவரை இரும்பு பெண்மணி என புகழாரம் சூட்டினர், அவரது பாசமான முகத்தை பார்த்ததாக தெரிவிக்கின்றனர். இவர்கள் மூன்று பேரையும் ”கிங் காங்” என்றே செல்லமாக அழைப்பாராம் ஜெயலலிதா.

உடல்நலம் தேறிய பின்னர் ஸ்பூனில் எடுத்து தானாகவே உணவுகளை சாப்பிடத் தொடங்கியுள்ளார், தமக்குப் பிடித்தமான உப்புமா, பொங்கல், தயிர் சாதம் உள்ளிட்டவற்றை சாப்பிட்டுள்ளார்.

இந்த ஸ்பூன் உப்புமாவை நான் ஷீலாவுக்காக சாப்பிடுகிறேன், இந்த ஸ்பூனை சாமு-வுக்காக சாப்பிடுகிறேன் என பாசத்துடன் கூறுவதாக தெரிவிக்கின்றனர்.

தினமும் ஒரு மணிநேரம் தொலைக்காட்சி பார்க்கும் ஜெயலலிதா, தங்களுடன் சேர்ந்து பழைய பாடல்களை கேட்டு ரசிப்பார், மக்கள் பிராத்தனை செய்வதை பார்த்து நெகிழ்ந்து போவார் என கூறுகிறார் ரேணுகா.

பிசியோதெரபி சிகிச்சை அளித்த போது, எங்களுடன் பந்து விளையாடுவார் என கூறும் செவிலியர்கள், சிறிது நேரம் ஆனவுடன், நான் சோர்வாக இருக்கிறேன்; பின்னர் பயிற்சியைச் செய்யலாமா என கேட்பாராம்.

யாராவது அறைக்குள் வந்தால், புன்னகையுடன் தங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும் என கேட்பதாக கூறுகிறார் செவிலியர் தலைமைக் கண்காணிப்பாளர் சுனிதா