ஜெயலலிதா, கருணாநிதி தேர்தலில் போட்டியிட தடை வருமா?

தேர்தலில் போட்டியிடுபவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும்போது உடல்நலம் குறித்த அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று  சென்னை ஐகோர்ட்டில், பொள்ளாச்சியை சேர்ந்த எஸ்.வி.சுப்பையா என்பவர் ஒருவழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

இவர் பதிவு செய்த வழக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு மட்டுமாக இருந்தாலும் இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி ‘ஏன் எம்.பி., எம்.எல்.ஏ. பதவிகளுக்கும் இந்த கட்டுப்பாடு விதிக்க கூடாது என்று கேள்வி எழுப்பினார்.

அதுமட்டுமின்றி  இதுகுறித்து உடனடியாக  இந்திய தேர்தல் ஆணையம், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்கவேண்டும் என்று உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.

இந்த வழக்கில் உடல்நலக்குறைவாக உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படுமானால் இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர்கள் போட்டியிட முடியுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.