சர்வதேச ரீதியில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள மைத்திரி! குழப்பத்தில் ஐ.நா ஆணையாளர்

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த கோரிக்கை தொடர்பில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுக்களை விடுவிக்க உதவுமாறு அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் உலக இலங்கையர் பேரவை என்ற சிங்கள அமைப்பு என்பன இந்த கோரிக்கையை விடுத்திருந்தன.

இந்த செயற்பாட்டின் காரணமாக, மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளதாக ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழு தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

ஜெனீவா யோசனையை நீக்கிக் கொள்ளும் அதிகாரம் அமெரிக்க ஜனாதிபதிக்கே உள்ளமையினால் செயிட் அல் ஹுசைனுக்கு அதிகாரத்தை பயன்படுத்த முடியாதென அந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை ஜனாதிபதி மற்றும் உலக இலங்கையர் பேரவை என்ற சிங்கள அமைப்பு முன்வைத்த கோரிக்கைகளுக்கு மனித உரிமை ஆணைக்குழு இதுவரையில் பதில் வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.