என் மகளை பொய் சொல்ல வைத்து விட்டார்கள்: திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியர் குற்றச்சாட்டு

மலையாள நடிகை மஞ்சு வாரியரும் மலையாள நடிகர் திலீப்பும் காதலித்து திருமணம் செய்தனர். அவர்களுக்கு மீனாட்சி என்ற 16-வயது மகள் இருக்கிறாள். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக திலீப்பும் மஞ்சுவாரியரும் பரிந்தனர். இதையடுத்து, திலீப், நடிகை காவ்யா மாதவனை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். அவரும் கணவரை பிரிந்தவர்.

இவர்களிடையே ஏற்கனவே நெருக்கம் இருந்தது. இதனால்தான் மஞ்சுவாரியர் திலீப்பை விட்டு பிரிந்தார் என்று கூறப்பட்டது. ஆனால் திலீப் அளித்த பேட்டியில், “என் மகள் விரும்பியதால்தான் காவ்யா மாதவனை திருமணம் செய்து கொண்டேன்” என்று கூறி இருந்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மஞ்சுவாரியர், “திலீப், காவ்யாவை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று எங்கள் மகள் மீனாட்சி கட்டாயப்படுத்தினாள் என்று கூறுவதில் உண்மை இல்லை. அவர்கள் இரண்டு பேரும் திருமணம் செய்து கொள்வதற்காக மகள் மீனாட்சியை பொய் சொல்ல வைத்து விட்டார்கள். திலீப் எப்பொழுதான் நடிப்பார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.