ஜேர்மனி நாட்டில் இருந்து 60,000 அகதிகளை திருப்பி அனுப்ப அரசு அதிரடி முடிவு! தமிழரின் நிலை…??

ஜேர்மனி நாட்டில் புகலிடம் மறுக்கப்பட்ட சுமார் ஒரு லட்சம் புலம்பெயர்ந்தவர்களை அவர்களின் தாய்நாடுகளுக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

ஜேர்மனியின் சான்சலரான ஏஞ்சலா மெர்க்கல் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தனது கட்சி தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.

அப்போது, ‘ஜேர்மனியில் புகலிடம் மறுக்கப்பட்ட 60,000 பேரை அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் தாய்நாடுகளுக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

எஞ்சிய 40,000 பேரை பலவந்தமாக நாடுகடத்த அரசு முடிவு செய்துள்ளதாக ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.

மேலும், தாய்நாடுகளுக்கு விருப்பத்தின் பேரில் திருப்பி அனுப்பப்படும் புலம்பெயர்ந்தவர்களுக்கு இலவசமாக விமான டிக்கெட் அளிப்பதுடன், ஒரு குறிப்பிட்ட தொகையையும் அவர்களுக்கு வழங்கப்படும்.

நடப்பாண்டு இறுதிக்குள் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், அரசின் தற்போதைய முக்கியப்பணி இதுவாக தான் இருக்கும் என சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.

இச்செய்தியாளர்களின் சந்திப்பில் ஜேர்மனியின் உள்நாட்டு விவாகரத்துறை அமைச்சரான Thomas de Maiziere பங்கேற்றுள்ளார்.

அப்போது அவர் பேசியபோது, ‘கடந்தாண்டு இறுதி முதல் புகலிடம் மறுக்கப்பட்ட 21,000 பேரை தாய்நாடுகளுக்கு திருப்பி அனுப்பியதாகவும், நடப்பாண்டில் முதல் 7 மாதத்தில் 35,000 பேரை தாய்நாடுகளுக்கு திருப்பி அனுப்பியதாக’ தெரிவித்துள்ளார்.

திருப்பி அனுப்பப் படும் தொகைக்குள் தமிழரும் உள்ளடங்கலாம் என குறிப்பிட்டுள்ள அன் நாட்டு ஊடகம் நாடுகள் ரீதியான வகைப் படுத்தலை ஜேர்மனி வெளியிட வில்லை எனக் குறிப்பிட்டுள்ளது.