உங்களுடைய ஐபோன் போலியா? கண்டறிய அருமையான வழி!

போலி ஐபோன் சந்தை வளர்ந்து வரும் வியாபாரம் போல் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஒரிஜினல் ஐபோன்களை விடக் குறைந்த விலை, பார்க்க அச்சு அசலாக உண்மையானது போன்றே காட்சியளிப்பது போன்றவை இதன் விற்பனைக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது.

உலகம் முழுக்கப் பிரபலமாக இருப்பதால் ஐபோன்கள் போலியாக வடிவமைக்கப்படுகின்றன. முன்னதாகச் சீனாவில் போலி ஐபோன்கள் அதிகளவு விற்பனையாகின.

ஆனால் இன்று இந்தியாவிலும் போலி ஐபோன்களின் வரவு அதிகரித்திருக்கிறது. ஒரு வேலை ஏற்கனவே பயன்படுத்திய ஐபோன்களை வாங்கும் போது போலி கருவியை வாங்கி ஏமாறாமல் இருக்க இந்தத் தொகுப்புப் பயனுள்ளதாக இருக்கும்..

ஆப்பிள் லோகோ ஐபோன்களை வாங்கும் போது முதலில் ஆப்பிள் லோகோ சரியானதாக இருக்கிறதா என்பதை உறுதி செய்திடுங்கள். பெரும்பாலான போலி ஐபோன்களில் லோகோ வித்தியாசமாக இருக்கும்.

திருகாணி ஆப்பிள் ஐபோன்களில் பென்டா லோப் ஸ்க்ரூகள் பயன்படுத்தப்படும். இதனால் சாதாரண ஸ்கிரூ இருந்தால் அது போலி ஐபோன் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

மெமரி கார்டு ஐபோன் கருவிகளில் கூடுதல் மெமரி வழங்க மெமரி கார்டு ஸ்லாட்கள் ஏதும் இருக்காது. இதனால் எக்ஸ்டெர்னல் மெமரி கார்டு கொண்ட ஐபோன்கள் என்றாலே அது போலி தான்.

இதே போல் சார்ஜிங் போர்ட் சுற்றி பிளாஸ்டிக் பார்டர் இருந்தாலும் போலி ஐபோன் தான்.கேமரா இது பலரும் எளிதாக அறிந்து கொள்ளக் கூடிய ஒன்று தான். கேமரா தரம் குறைவாக இருந்தால் அது நிச்சயம் போலி ஐபோன் தான்.

இதோடு போலி ஐபோனினை ஆன் செய்ததும் வெல்கம் ஸ்கிரீனில் வெல்கம் என்ற ஆங்கில வார்த்தை வரும். ஒரிஜினல் ஐபோன்களில் ஆப்பிள் லோக் வரும்.

ஐஎம்இஐ நம்பர் ஐபோனின் ஜெனரல் செட்டிங்ஸ் பகுதியில் IMEI நம்பரை பார்க்க முடியும். இதே நம்பரை ஆப்பிள் தளத்திலும் உறுதி செய்து கொள்ள முடியும். போலி ஐபோனில் இதைச் செய்ய முடியாது.

ஐட்யூன்ஸ் மற்றும் ஆப்பிள் ஸ்டோர் போலி ஐபோன்களில் ஐட்யூன்ஸ் கனெக்ட் ஆகாது. இதனால் போலி ஐபோன்களைக் கண்டறிவது மிகவும் சுலபமாகிறது.

மேலும் ஆப்பிள் ஸ்டோர் ஐகான் கிளிக் செய்து ஆப்பிள் ஸ்டோர் தளம் ஓபன் ஆகவில்லை எனில் அது போலி ஐபோன் என்பதை உறுதி செய்து கொள்ள முடியும்.

பேக்கேஜிங் உண்மையான ஐபோன் பேக்கேஜிங் ஐபோன் மாடல், அது தயாரிக்கப்பட்ட நாடு, சீரியல் நம்பர் போன்றவற்றைக் கொண்டிருக்கும்.

இந்த தகவல்கள் இல்லையெனில் இது போலி பேக்கேஜிங் என்பதை உறுதி செய்திடுங்கள்..