வறுமையில் வாடிய குடும்பம்: ஓடி வந்து உதவிய நடிகர் விஷால்

வறுமையில் உள்ள பிரபல இசையமைப்பாளர் சந்திரபோஸ் குடும்பத்திற்கு நடிகர் விஷால் தனது அறக்கட்டளை மூலம் குடும்பநல நிதி உதவியை செய்துள்ளார்.

இசையமைப்பாளர் சந்திரபோஸ் 300 படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். அதோடு அவர் மரணமடைந்து 5 ஆண்டுகள் ஆகிறது.

இவருக்கு இரு மனைவியர், மூன்று மகன்கள், ஒரு மகள் என பெரிய குடும்பம் உள்ளது. இவர் மறைவுக்கு பின்னர் இவரது குடும்பம் வறுமையான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.

அவர் மனைவிகள் அக்கம் பக்கத்து வீடுகளில் பத்துப் பாத்திரம் தேய்த்து வாழ்க்கையை ஓட்டுவதாக கூட சமீபத்தில் செய்திகள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் மருத்துவ செலவுக்குக் கூட பணமில்லாமல் அவர் மனைவி ராஜகுமாரி கஷ்டப்படுவதை அறிந்த நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் உடனே தனது தேவி அறக்கட்டளை மூலம் உதவியை வழங்கியுள்ளார்.