இந்தியாவை வீழ்த்த இங்கிலாந்தின் புது வியூகம்

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவை தோற்கடிக்க புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது.

இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆன நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அபாரமாக 246 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்தியாவை எப்படியேனும் வீழ்த்தி டெஸ்ட் தொடரில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் சுழற்பந்து ஆலோசகராக சக்லைன் முஸ்தாக்கை நியமித்துள்ளது.

மேலும், சக்லைன் முஸ்தாக்கை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டு (இ.சி.பி.,) இங்கிலாந்து சீனியர் அணியின் சுழற்பந்து ஆலோசகராக நியமித்திருந்தது.

இவரது ஒப்பந்தம் கடந்த நவம்பர் 1ல் முடிந்துவிட்டது, இருந்த போதிலும் தற்போது இவரது ஒப்பந்தத்தை நீட்டித்துள்ளது.

மேலும், இவரை நியமித்ததன் பலனாக ரசித் இதுவரை 13 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

இதனால், இவரை இங்கிலாந்து அணியின் முழுநேர சுழற்பந்து பயிற்சியாளராக நியமிக்க இ.சி.பி.திட்டமிட்டுள்ளது.

இது குறித்து இ.சி.பி.அதிகாரி கூறியதாவது, உலகின் எந்த பகுதிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும் டெஸ்ட் தொடரின் 4வது மற்றும் 5வது நாளில் சுழற்பந்துவீச்சாளர்களின் பங்கு மிகவும் அவசியம்.

ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரர்களின் பட்டியலை எடுத்து பார்த்தால், அதில் சுழற்பந்துவீச்சாளர்கள் தான் முன்னணியில் உள்ளனர். அதனால் இது மிகவும் அவசியமான ஒன்று என தெரிவித்துள்ளார்.