முருகன் வளர்ந்த இடம்

கும்பகோணத்திற்கு அருகே உள்ளது திருச்சிற்றம் என்ற ஊர். இதன் அருகில் விளத்தொட்டி என்ற கிராமம் இருக்கிறது. பிரம்மபுரீஸ்வரர் திருத்தலம் முருகப்பெருமான் தொட்டிலில் வளர்ந்த தலமாக போற்றப்படுகிறது.

இங்குள்ள ஆலயத்தில் அருள்பாலிக்கும் இறைவனின் திருநாமம் ‘பிரம்மபுரீஸ்வரர்’ என்பதாகும். இறைவியின் பெயர் இட்சுரச நாயகி. சிவாலயமாகத் திகழ்ந்தாலும், முருகப்பெருமானே இங்குப் பிரதான வழிபாட்டுக் கடவுளாக இருக்கிறார்.

முருகன் இங்கே தொட்டிலில் வளர்ந்ததால், இவ்வூர் மக்கள் தங்கள் வீட்டில் குழந்தை பிறந்தவுடன் பத்து நாட்கள் தொட்டிலில் போடுவதில்லை. தூளியில் போட்டுத்தான் தாலாட்டுகிறார்கள்.