இலங்கையில் இணையதளம் பயன்படுத்துவோருக்கு காத்திருக்கும் ஆபத்து!

தொலைபேசி சேவை வழங்குநர் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நட்டத்தை ஈடு செய்யும் வகையில் இணைய டேட்டாவுக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

இணைய டேட்டா மூலம் வைபர், வட்ஸ் ஆப், பேஸ்புக் போன்றவைகளில் அழைப்பு பெற்றுக் கொள்வதனால் தொலைபேசி அழைப்புக்கான சேவையை வழங்கும் நிறுவனங்களுக்கு நட்டம் ஏற்படுகிறது. அதற்கமைய அதன் நட்டத்தை ஓரளவு சமப்படுத்துவதற்காக இணையத்தள சேவை கட்டணத்தை அதிகரிக்க நேரிட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக எதிர்வரும் புரட்சிகரமான பயணம் ஆரம்பிக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார். இவ்வாறான சந்தர்ப்பத்தில் இணையத்தள சேவை கட்டணம் அதிகரிக்கபடுவது ஏன் என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ்வாறான கட்டணங்கள் அதிகரிப்பின் ஊடாக டெலி கம்யூனிகேஷன் நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்திற்கு சில வருமானத்தை பெற்றுக் கொள்வதற்காக இவ்வாறு கட்டணம் அதிகரிக்கப்பட்டதாக நிதியமைச்சர் குறிப்பிட்டார்.

தொலைப்பேசி சிம் அட்டை ஒன்றை பதிவு செய்யும் போது 250 ரூபாய் அறிவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளாகவும், தொலைப்பேசி ஊடாக ஏற்படுகின்ற அவசியமற்ற பிரச்சினைகளை வேறு பக்கம் திருப்பிக் கொள்வதற்காக தான் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.