விழுப்புரம் மாவட்டத்தில் சாலையோரம் கொட்டப்பட்டிருந்த காலாவதியான சாக்லெட்டுக்களை எடுத்து சாப்பிட்ட 100 மாணவர்களுக்கு வாந்தி , மயக்கம் ஏற்பட்டதன் காரணமாக அவர்கள் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து கொண்டிருப்பதாகவும், அவர்களின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த தகவல் கிடைத்தவுடன் சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் விழுப்புரம் மருத்துவமனை முன் குவிந்ததால் அப்பகுகுதியில் பதட்டம் ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள கூத்தக்குடி சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே இந்த காலாவதியான சாக்லேட்டுக்களை கொட்டியது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.








