ஜெயலலிதாவின் கையெழுத்தில் மாற்றம்! திடுக்கிடும் தகவல்!

நடந்து முடிந்த தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மூன்று தொகுதிகளிலும் திமுகவை தோற்கடித்தது.

இதனையடுத்து அந்த கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா தேர்தல் வெற்றிக்கு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.

இந்த அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதாவின் கையெழுத்து மிகவும் தெளிவாக உள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் கிளம்பிய ஜெயலலிதாவின் கையெழுத்து பிரச்சனை தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் விவாதங்களாக மாறியுள்ளது.

வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்ட போது ஜெயலலிதா கையெழுத்து இடம் பெறாதது சர்ச்சையை கிளப்பியது.

இதனையடுத்து அதிமுக வேட்பாளர்களுக்கு கட்சி சின்னம் ஒதுக்கும் படிவத்தில் ஜெயலலிதா கையெழுத்து இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக அவரது கைரேகை அதில் பதிவு செய்யப்பட்டிருந்தது.இதனையடுத்து முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை கையெழுத்து போடும் அளவிற்கு இல்லையா என்ற கேள்விகள் எழுந்தது.

அவருக்கு பிஸியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் கையெழுத்தில் மாற்றம் இருக்கும் என்பதால் கையெழுத்து போடவில்லை என அதிமுக தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு எழுதுவதற்கு பயிற்சி அளிக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகின. இதனையடுத்து தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு அறிக்கை வெளியிட்டு தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களிக்க கேட்டுக்கொண்டார்.

அந்த அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதாவின் கையெழுத்து இடம்பெற்று இருந்தது. அந்த கையெழுத்து ஜெயலலிதாவின் கையெழுத்து போலவும் சற்று சிரமப்பட்டு போடப்பட்டது போலவும் இருந்தது.

இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து நன்றி தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதாவின் முந்தைய கையெழுத்தை விட நல்ல மாற்றம் தெரிகிறது.

அவரது கையெழுத்து மிகவும் தெளிவாக இருக்கிறது. அவரது கையெழுத்து மூலமே அவர் நல்ல குணம் பெற்றுவிட்டார் என்பது தெளிவாகிறது என பலரும் சமூக வலைதளங்களில் கூற ஆரம்பித்துள்ளனர்.