வீரவன்ச வீட்டுக்குள் நடந்த மர்மம்! மற்றுமொரு தகவல் அம்பலம்

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச வீட்டில் உயிரிழந்த இளைஞர் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் வீரவன்ச வீட்டில் உயிரிழந்த இளைஞனின் மரணம் தொடர்பில் கடுவெல முன்னாள் மேயர் ஜீ.எச்.புத்ததாஸ முக்கிய சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த தகவல்களை வெளியிட்டிருந்தார்.

சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று விமல் வீட்டில் இளைஞர்கள் மூவர் இரண்டாவது மாடியில் உறங்கியுள்ளனர். குறித்த இளைஞர்கள் மூவருக்கும் இரண்டு விரிப்புகள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளன.

எனினும் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் அந்த இளைஞருக்கு மாத்திரம் மூன்றாவது மாடியில் மெத்தையுடன் படுக்கை விரிப்புடன் தலையணை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவருக்கு இரண்டு தலையணைகள் வழங்கப்பட்டுள்ளது.

மற்றைய தலையணையில் உறங்கிய மற்றையவர் தொடர்பில் சந்தேகம் வெளியிட்ட மேயர் இது தொடர்பில் கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பில் உதய கம்மன்பில போன்றோர் தைரியம் இருந்தால் பதிலளிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

லஹிரு ஜனித் என்ற 24 வயதுடைய இளைஞரின் உடம்பில் அதிக அளவிலான வயக்ரா மாத்திரைகள் சேர்ந்திருந்ததாக வெளியாகியிருந்த மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான சூழ்நிலையில் வீரவன்சவின் மனைவி விரைவில் கைது செய்யப்படலாம் என அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. இதனால் நாடாளுமன்ற உறுப்பினர் மன ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.