மாவீரர் தினத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூறலாம்!

மாவீரர் தினத்தில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூறுவதற்கு வடக்கு மக்களுக்கு உரிமையிருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் விடுதலைப் புலிகளை நினைவு கூற முடியாது எனவும் அவ்வாறு அவர்களை நினைவு கூர்ந்தால் அது தொடர்பாக பாதுகாப்பு தரப்பினர் பார்த்துக்கொள்வார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.