ஆசிய அளவில் 2வது இடத்தை பிடித்த ‘2.0’

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘2.0’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் கடந்த ஞாயிறு அன்று மும்பையில் பிரமாண்டமான விழாவில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது.

சல்மான்கான், உள்பட பல பிரபலங்கள் இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.இந்நிலையில் இந்த படம் இந்தியாவிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகும் படம் என்ற பெருமையை பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால் தற்போது ஆசிய அளவில் தயாராகும் 2வது பெரிய பட்ஜெட் படம் இதுதான் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இந்த படம் $55 மில்லியன் டாலர் செலவில் தயாராகி வருகிறது.

அதாவது இந்திய மதிப்பில் இந்த தொகை சுமார் ரூ.360 கோடி ஆகும்.சீனாவில் $100 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட ‘Asura’ என்ற திரைப்படம் ஆசிய அளவில் அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படம் என்ற பெருமையை பெற்றுள்ள நிலையில் ‘2.0’ திரைப்படம் ஆசிய அளவில் 2வது இடத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு தமிழ்ப்படம் ஆசிய அளவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராவது கோலிவுட்டின் திரைப்படங்கள் ஹாலிவுட் தரத்தை நெருங்கிவிட்டதையே காட்டுகின்றது.