ஜனாதிபதி ஒபாமாவை நெகிழ வைத்த 6 வயது சிறுவன்: காரணம் என்ன?

அமெரிக்க ஜனாதிபதியான ஒபாமாவை நேரில் சந்தித்த 6 வயது சிறுவன் ஒருவன் விடுத்துள்ள உருக்கமான கோரிக்கை தற்போது வைரலாக இணையத்தளங்களில் பரவி வருகிறது.

சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு யுத்தத்தில் தினமும் பலர் உயிரிழந்து வருகின்றனர்.

கடந்த செப்டம்பர் மாதம் அலப்போ நகரில் நிகழ்ந்த தாக்குதலில் Omran Daqneesh என்ற சிறுவன் பாதிக்கப்பட்டு கட்டிட இடிபாடுகளுக்கு இடையில் இருந்து மீட்க பட்டான்.

உடலெங்கும் ரத்தம் வடிய ஒரு ராணுவ வீரர் சிறுவனை மீட்ட காட்சிகள் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்தது.

இதே காட்சிகளை அமெரிக்காவில் உள்ள நியூயோர்க் நகரை சேர்ந்த Alex என்ற 6 வயது சிறுவன் பார்த்து கண் கலங்கியுள்ளான்.

பின்னர், உடனடியாக ஜனாதிபதி ஒபாமாவிற்கு கடிதம் ஒன்றை எழுதிய சிறுவன் ‘சிரியாவில் தாக்கப்பட்டOmran Daqneesh என்ற அந்த சிறுவனை அமெரிக்காவிற்கு அழைத்து வர உதவுங்கள். எனது வீட்டில் அவரை தங்க வைத்துக்கொள்கிறேன்’ என உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளான்.

சிறுவன் எழுதி சமூக வலைத்தளத்தில் வெளியான இந்த தகவலை பார்த்த ஜனாதிபதி ஒபாமா அதை மற்றவர்களுடன் பகிர்ந்துள்ளார்.

மேலும், சிரியா யுத்தத்தை தடுப்பது தொடர்பான விவாத கூட்டத்திலும் அலெக்ஸ் எழுதிய அந்த கடிதத்தை ஒபாமா படித்துக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், அண்மையில் அலெக்ஸை வெள்ளை மாளிகைக்கு அழைத்த ஒபாமா அவனிடம் நேரடியாக உரையாடி பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

‘உன்னுடைய வார்த்தைகளை அனைவரும் கேட்டுள்ளனர். உன்னை போன்ற ஒரு சமுதாயம் தான் எதிர்காலத்தில் அமைய வேண்டும். உன்னை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்’ என ஜனாதிபதி ஒபாமா உருக்கமாக பேசியுள்ளார்.625-0-560-350-160-300-053-800-668-160-90-28 625-0-560-350-160-300-053-800-668-160-90-29 625-0-560-350-160-300-053-800-668-160-90-30