பெண்களுடன் உல்லாசம்! மனைவியை கொடூரமாக கொன்று உடலை துண்டாக்கிய கணவன்

பெண்களிடம் உல்லாசமாக இருக்க தன் மனைவி தடையாக இருப்பார் என கருதி அவரை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி ஸ்டோர் ரூமில் வைத்திருந்த கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனி நாட்டில் வசித்து வருபவர் Horst Koenig (53), இவர் மனைவி Grace (37).

நன்றாக போய் கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில் திடீரென புயல் வீசியது. இணையம் மூலம் தாய்லாந்தில் இருக்கும் உல்லாச விடுதிகளின் பெண்கள் நட்பு Horstக்கு கிடைத்துள்ளது.

தாய்லாந்துக்கு போய் அங்குள்ள பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்க நினைத்த Horst அதற்கு தன் மனைவி Grace தடையாக இருப்பார் என கருதி அவரை கொல்ல திட்டமிட்டார்.

அதன்படி படுக்கையில் தூங்கி கொண்டிருந்த மனைவியை சுத்தியலால் அடித்து கொலை கொடூரமாக செய்தார் Horst.

பின்னர் அவர் சடலத்தை எட்டு துண்டுகளாக வெட்டி அதை ஒரு பையில் போட்டு தன் வீட்டு ஸ்டோர் ரூமில் வைத்துள்ளார்.

பின்னர் செலவுக்கு மனைவி கழுத்தில் இருந்த நகைகள் மற்றும் வீட்டிலிருந்த பணத்தை எடுத்து கொண்டு தாய்லாந்துக்கு சென்று விட்டார்.

பின்னர் ஐந்து வாரங்கள் கழித்து ஜேர்மனி வந்த Horst-யை, உறவினர்கள் சந்தேகத்தின் பேரில் கொடுத்த புகாரின் அடிப்படையில் பொலிசார் கைது செய்தனர்.

இதன்பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, Horst செய்தது மன்னிக்க முடியாத கொடூர குற்றம், அதனால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.