ஒரே ஒரு இரவில் இப்படியா நடந்தது! கருகிக் போன படுக்கையறை

பிரித்தானியாவில் இரவு முழுவதும் மொபைல் போனுக்கு சார்ஜ் போட்டதால் வெடித்து சிதறியதில் படுக்கையறை முழுவதுமே கருகிப் போனது, அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

பிரித்தானியாவின் வேல்சில் Porthmadog நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார்.

இவர் கடந்த செவ்வாயன்று இரவு மொபைல் போனுக்கு சார்ஜ் போட்டுள்ளார்.

சார்ஜர் சூடாகி வெடித்ததில் படுக்கையறையே கருகிப் போனது, உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் முதல் மாடியும் கடுமையாக சேதமடைந்துள்ளது.

எனவே இரவு நேரங்களில் மொபைலுக்கு சார்ஜ் போடும்போது கவனமாக இருக்க வேண்டும் என பொலிசார் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.aza