வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது.

கடந்த 10ம் திகதி நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

இன்று மாலை 5.00 மணிக்கு வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

ஜே.வி.பி மற்றும் கூட்டு எதிர்க்கட்சி ஆகியன வாக்கெடுப்பின் போது எதிராக வாக்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாக்கெடுப்பின் போது அதற்கு ஆதரவாக வாக்களிக்கக்கூடிய சாத்தியம் உண்டு என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை முதல் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதங்கள் நடத்தப்பட்டு, எதிர்வரும் 10ம் திகதி மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.