அதிரடி நடவடிக்கைக்கு தயாராகும் கூகுள் மற்றும் பேஸ்புக்

முன்னணி இணையத்தளங்களாக விளங்கும் கூகுள் மற்றும் பேஸ்புக் என்பன விளம்பர சேவை ஒன்றினையும் வழங்கிவருகின்றமை தெரிந்ததே.

இவ் விளம்பர சேவையினைப் பயன்படுத்தி சில போலி இணையத்தளங்கள் விளம்பரப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந் நிலையில் குறித்த இணையத்தளங்களை முடக்குவதற்கு கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனம் என்பன தீர்மானித்துள்ளன.

குறித்த செய்தி தளங்கள் போலியான செய்திகளை அல்லது தகவல்களை வெளியிட்டு வருகின்றமையே இந்த நடவடிக்கைக்கு காரணமாகும்.

அமெரிக்காவில் அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது இவ்வாறான பல இணையத்தளங்கள் போலியான தகவல்களை வெளியிட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறான இணையத்தளங்களை தடைசெய்யவுள்ளதாக இரு நிறுவனங்களும் உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளன.

இதனால் அடுத்துவரும் சில தினங்களில் போலியான செய்திகளை அல்லது தகவல்களை பரப்பிய இணையத்தளங்கள் தொடர்பான விபரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.