பிரித்தானிய மகாராணியைச் சந்தித்த இலங்கையின் முக்கிய பெண்

பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்துக்கான புதிய இலங்கை உயஸ்தானிகராக அமரி விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

அமரி விஜேவர்தன தனது நியமனக்கடிதத்தை பிரித்தானிய மகாராணி எலிசபெத்திடம் இன்று கையளித்துள்ளார்.

குறித்த கடிதத்தை கையளித்தன் பின்னர் இரண்டு நாடுகளுக்கும் இடையிலுள்ள நட்புறவை வழுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை தற்போது அமரி விஜேவர்தனவுக்கு வழங்கப்பட்டிருக்கும் உயஸ்தானிகர் பதவியை இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் குமார் சங்கக்காரவை ஏற்குமாறு ஜனாதிபதி ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.