மீண்டும் அதிரடி காட்டிய மோடி! கொஞ்ச நேரத்தில் கதி கலங்கிய மக்கள்- விளக்கமளித்த மத்திய அரசு

இந்தியாவில் 50 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறும் அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகும் என்ற தகவல் காட்டுத்தீ போல் பரவிவருகின்றது.

கடந்த 08ம் திகதி பிரதமர் மோடி இந்தியாவில் பழைய 500, 1000 ரூபா நோட்டுக்கள் செல்லாது என்று திடீரென அறிவித்தல் விடுத்தார்.

இந்தியாவில் உள்ள கறுப்புப் பணத்தையும், கள்ள நோட்டையும் இல்லாது செய்வதற்கே இந்தத் திட்டம் என்றும். இதற்கு நாட்டு மக்கள் முழு ஆதரவையும் தரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் சரிசமமாக வந்து கொண்டிருக்கின்றன. மோடி அரசின் இந்த அறிவிப்பால் இந்தியாவில் மக்களின் இயல்பு வாழ்க்கையில் தளர்வு ஏற்பட்டுள்ளது.

இந்த சிக்கல் தீர்ந்து போவதற்கு முன்னர், 50 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளும் செல்லாது என தகவல் வெளியாகியுள்ளமையினால் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், அந்த செய்திகளில் உண்மையில்லை என்றும். அது தொடர்பாக மத்திய அரசு எந்தத் தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை என்றும் மத்திய அரசு தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது.

50, 100 ரூபா நோட்டுக்கள் தொடர்பான வெளியான செய்திகள் வெறும் வதந்தி என்றும். மக்கள் இது குறித்து அஞ்சத்தேவையில்லை. 500 மற்றும் 1,000 ரூபாயைத் தவிர மற்ற ரூபாய் நோட்டுகளைத் திரும்பப்பெறும் எண்ணம் இல்லை என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.