மிட்செல் ஒபாமாவை குரங்கு என கூறியதற்கு எதிர்ப்பு: பதவியை ராஜினாமா செய்த மேயர்

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிட்செல் ஒபாமாவை இனவெறியை தூண்டும் வகையில் கடுமையாக விமர்சனம் செய்த மேயர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அமெரிக்க தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து டொனால்ட் டிரம்பின் மனைவியான மெலினியா அமெரிக்க முதல் குடிமகள் என்ற அந்தஸ்த்தை பெற்றுள்ளார்.

இந்நிலையில், கடந்த திங்கள் கிழமை அன்று மேற்கு வெர்ஜினியா மாகாணத்தை சேர்ந்த Pamela Ramsey Taylor என்பவர் சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘அமெரிக்க நாட்டிற்கு தற்போது ஒரு அழகான, நாகரீகமான முதல் குடிமகள்(மெலினியா டிரம்ப்) கிடைத்துவிட்டார். கடந்த 8 ஆண்டுகளாக வாலில்லா குரங்கு போன்ற தோற்றம் உடைய முதல் குடிமகளை( மிட்செல் ஒபாமா) பார்த்து மிகவும் சோர்வடைந்து விட்டேன்’ என அதிரடியாக கருத்து கூறியுள்ளார்.

இக்கருத்து பரவலாக பரவியதை தொடர்ந்து கிளே நகர பெண் மேயரான Beverly Whaling என்பவர் இக்கருத்தை வரவேற்று அதனை பகிர்ந்துள்ளார்.

மேயரின் இந்நடவடிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால், அவர் பதவி விலக வேண்டும் என 1,70,000 பேர் கையெழுத்து போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

தனக்கு எதிராக கண்டனம் அதிகரிப்பதை கண்ட மேயர் உடனடியாக தனது கருத்திற்கு மன்னிப்பு கோரி பத்திரிக்கைகளுக்கு செய்தி அனுப்பியுள்ளார்.

அதில், ‘தேர்தல் முடிவுகளை பற்றி தான் கருத்து தெரிவித்ததாகவும், மிட்செல் ஒபாமாவை குறித்து இனவெறியை தூண்டும் விதத்தில் கருத்து தெரிவிக்கவில்லை’ என விளக்கம் அளித்துள்ளார்.

ஆனால், மேயரின் விளக்கத்தை ஏற்காத அந்நகர மக்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் வருத்தத்துடன் தகவல் வெளியிட்டுள்ள மேயர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.