ஜனாதிபதியாக உள்ள டிரம்ப் வெள்ளைமாளிகையில் தங்கமாட்டார்? மனைவி பகீர் தகவல்

அமெரிக்க ஜனாதிபதியாக உள்ள டிரம்ப் முழுநேரமும் வெள்ளை மாளிகையில் தங்குவார் என எதிர்பார்க்க முடியாது என அவரது முதல் மனைவி கருத்து தெரிவித்துள்ளார்.

வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி பதவி ஏற்க உள்ள டிரம்ப் குறித்து அவ்வப்போது பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் ஜனாதிபதியாக உள்ள டிரம்ப் குறித்து இதுவரை கருத்து கூறாமல் இருந்த அவரின் முதல் மனைவி இவானா தற்போது ஒரு கருத்தை கூறியுள்ளார்.

டிரம்ப்பிற்கு ஏராளாமான சொகுசு விமானங்கள் உள்ளதாகவும், அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவி ஏற்பவர்கள் ஏர் போர்ஸ் ஒன் என்ற அரசு விமானத்தில் தான் பயணம் செய்வார்கள். ஆனால் டிரம்ப் அதை பயன்படுத்தாமல் அவருக்கு சொந்தமாக உள்ள போயிங் 757 ரக விமானத்தை டிரம்ப் போர்ஸ் ஒன் என்று பெயர் மாற்றம் செய்து பயன்படுத்துவார் என எதிர்ப்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் டிரம்ப் முழு நேரமும் வெள்ளை மாளிகையில் தங்குவார் என எதிர்ப்பார்க்க முடியாது என்றும் வெள்ளை மாளிகையில் உள்ள வசதிகளை விட டிரம்புக்கு சொந்தமாக நியூயோர்க் நகரில் அமைந்துள்ள டிரம்ப் டவரில் தான் அவர் தங்குவதற்கு விரும்புவார் என்றும் இவானா தெரிவித்துள்ளார்.