ரூ.6,000 கோடியை பிரபல தொழிலதிபர் அரசிடம் ஒப்படைத்தாரா? வெளியான உண்மை தகவல்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி சில தினங்களுக்கு முன்னர் புழக்கத்தில் இருக்கும் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார்.

அவர் கூறியதில் இருந்து பல்வேறு தரப்பிலான வதந்திகளும் ஒரு சில உண்மைகளும் வெளிவரத்தொடங்கியுள்ளன. இந்நிலையில் பிரபல வைர வியாபாரியான லால்ஜிபாய் மத்திய அரசிடம் 6 ,000 கோடிரூபாய் பணத்தை ஒப்படைத்தாக தகவல்கள் வெளியாகின.

இது நாடு முழுவதும் பரவி பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் இது குறித்து அவர் கூறுகையில், தான் எந்த ஒரு தொகையும் கொடுக்கவில்லை என மறுத்துள்ளார். அது மட்டுமில்லாமல் இவர் தான் பிரதமர் நரேந்திர மோடியின் கோட்டை 4.3 கோடிக்கு ஏலம் வாங்கியவர், இதன் காரணமாகவே இவரை வைத்து வதந்தி பரப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் லால்ஜிபாய் படேல் இந்தியாவில் முதல் 10 வைரத் தொழில் அதிபர்களுள் ஒருவராக இருக்கிறார். இவரின் தற்போதைய சொத்து மதிப்பு 480 மில்லியன் அமெரிக்க டொலராக உள்ளது.