விவசாயிகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யும் மோடி!

மத்திய அரசால் செல்லாது என அறிவிக்கப்பட்ட 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காக மக்கள் வங்கிகளில் காத்துக்கிடக்கின்றனர்.

முக்கிய தேவைக்காக சேமித்து வைத்த பணத்தை செலவு செய்ய முடியாத நிலையில், அதை வங்கிகளில் டெபாசிட் செய்தால் ஏதாவது பிரச்சனையை சந்திக்க நேரிடுமோ என்ற அச்சத்தில் பலர் உள்ளனர்.

தற்போது பணம் மாற்றவும், எடுக்கவும் உள்ள கட்டுப்பாடுகள் சற்று தளர்த்தப்பட்டபோதிலும், கள நிலவரத்தில் மாற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

இந்நிலையில், விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தி உள்ளார்.

‘காரிப் பருவ அறுவடை முடிந்து தங்களிடம் இருப்பு உள்ள பணத்தை ரபி பருவ விதைப்புக்கு தேவையான விதைகள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் வாங்க பயன்படுத்தலாம் என நம்பியிருந்தனர்.

மத்திய அரசின் திடீர் அறிவிப்பினால் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்துள்ளனர்.

திருமண சீசன் என்பதால் பல விவசாயிகள் பணத்தை பயன்படுத்த முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, பா.ஜ.க. அரசு உண்மையிலேயே விவசாயிகளின் நலனின் அக்கறை கொண்ட அரசாக இருந்தால், அவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்து உதவ வேண்டும்’ என்று அகிலேஷ் கூறியுள்ளார்.