பஞ்சாயத்து உத்தரவால் கற்பழிக்கப்பட்ட பெண்: தீக்குளித்து தற்கொலை செய்த பரிதாபம்

பாகிஸ்தான் நாட்டில் பஞ்சாயத்து தலைவர்களின் உத்தரவால் கற்பழிக்கப்பட்ட பெண் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் நகரில் உள்ள Dhillu Gharbi என்ற சிறிய கிராமத்தில் தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதே கிராமத்தில் கணவர் ஒருவர் வெளிநாட்டில் வேலை செய்ய, அவரது மனைவி பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் பெண்ணின் தந்தை அப்பகுதியில் வசித்து வந்த சிறுமியிடம் தகாத முறையில் நடந்துள்ளார்.

இப்புகார் கிராம பஞ்சாயத்திற்கு சென்றுள்ளது.

அப்போது, பெண்ணின் தந்தை சிறுமியிடம் தகாத முறையில் நடைந்துக்கொண்டதால், அச்சிறுமியின் தந்தை பெண்ணை கற்பழிக்க வேண்டும் எனக்கூறி தண்டனை விதித்துள்ளனர்.

பஞ்சாயத்து தீர்ப்பின்படி சிறுமியின் தந்தை பெண்ணை கொடூரமாக கற்பழித்துள்ளார். இதனால், அப்பெண் கர்ப்பம் தரித்துள்ளார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் வெளிநாட்டில் உள்ள கணவன் ஊருக்கு திரும்புவதாக தகவல் கிடைத்து மனைவி பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

‘தான் கர்ப்பமாக இருப்பதை அறிந்தால் கணவருக்கு பெருத்த அவமானம் ஏற்படும்’ என தீர்மானித்த மனைவி 5 மாத கர்ப்பமாக இருந்தபோது உடலில் எண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார்

இச்சம்பத்தை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். எனினும், உயிரிழப்பதற்கு முன்னர் அனைத்தையும் வாக்குமூலமாக அளித்துள்ளார்.

இந்த வாக்குமூலத்தை பதிவு செய்துக்கொண்ட பொலிசார் பெண்ணின் தந்தை, அவரை கற்பழித்த சிறுமியின் தந்தை மற்றும் சில பஞ்சாயத்து தலைவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.