கற்பழிப்பை விட மோசமான செயல் இதுதான்…

கற்பழிப்பை போன்ற ஒரு கொடுமை பெண்களுக்கு வேறு ஏதுமில்லை. ஆனால் இந்த கொடுமைக்கு பிறகும் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலையையும், மனதையும் காயப்படுத்தும் கொடுமைகள் மருத்துவ பரிசோதனை என்ற பெயரில் நடக்கிறது.

பாலியல் தாக்குதலுக்கு உள்ளான பெண் மருத்துவ பரிசோதனையின் போது முதலில் மருத்துவர் முன் ஒரு ஷீட் மீது நின்று ஒவ்வொரு உடையாக அனைத்தையும் கழற்ற வேண்டும்.

அப்போது சேகரிக்கப்படும் அனைத்து பொருட்களும் சோதனைக்கு அனுப்பி வைக்கப்படும். இரத்தக் கறை, விந்தணு என எதுவாக இருந்தாலும் கண்டறிய இவற்றை எல்லாம் சேகரிக்கின்றனர்.

பின்னர் அந்த பெண் நிர்வாணமாக அல்ட்ரா-வைல்ட் லைட் முன்பு நிறுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்படுவார். உடலில் கீறல்கள், காயங்கள் போன்றவை இருந்தால் இந்த சோதனையின் மூலம் தெரியவரும். அப்படி காயங்கள் இருந்தால் அவற்றை மிக அருகில் புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்வர். அது உடலின் எந்த பகுதியாக இருந்தாலும் சரி.

தவிர, விந்தணு சார்ந்த பரிசோதனைகளுக்காக பெண்ணின் பிறப்புறுப்பில் இருந்து முடிகள் சேகரிக்கப்படுகின்றன. இதுமட்டுமல்லாமல் பிறப்புறுப்பு முழுவதும் மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. இதன் மூலம் கற்பழிப்பு குற்றவாளியை கண்டுபிடிக்க முடியும். மருத்துவ ரீதியாகவும் குற்றவாளியை கண்டறியவும் இது கடைபிடிக்கப்படுகிறது.

இருப்பினும் இது போன்ற சோதனைகள் பாதிக்கப்பட்ட பெண்ணை மேன்மேலும் காயப்படுத்தும் விடயமாகவே உள்ளது.