மாவீரர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் இளவரசர் ஹரி

பிரித்தானிய இளவரசர் ஹரி, நேற்று (சனிக் கிழமை) தென்மேற்கு லண்டனின் Twickenham பகுதியில் உள்ள போரில் கொல்லப்பட்டோரின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

போரின் போது கொல்லப்பட்ட மாவீரர் தினம் இன்று (ஞாயிற்றுக் கிழமை) அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், அதற்கு முன்னோடியாகவே நேற்று ஹரி மாவீரர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

இதற்காக அங்கு வருகை தந்த இளவரசர் ஹரியைப் பார்ப்பதற்காக பெருந்தொகையாக மக்கள் அங்கு கூடியிருந்தனர்.

நேற்று பிற்பகல் Twickenham பகுதியில் இடம்பெற்ற இங்கிலாந்து – தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ரக்பி போட்டிக்கு இளவரசர் ஹரி தலைமை தாங்கியதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில், பிரித்தானிய அரச குடும்பத்தினர் மற்றும் மூத்த அரசியல்வாதிகள், இன்று மத்திய லண்டனில் அமைந்துள்ள மாவீரர்கள் கல்லறைகளில் அஞ்சலி செலுத்துவார்கள் என அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.