மற்றொரு தொலைக்காட்சி நடிகை தற்கொலை: சோகத்தில் திரையுலகம்

தற்கொலை சம்பவங்கள் திரையுலகில் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டில் நடிகை சபர்ணா மரணமடைந்த சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்நிலையில் நேற்று மலையாள நடிகை ரேகா மோகன் கேரளாவில் திரிசூரில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பில் இறந்து கிடந்துள்ளார்.

கடந்த இருநாட்களாக துபாயில் உள்ள அவரது கணவருடன் எந்த தொடர்பும் செய்யாமல் இருந்துள்ளார். இதனையடுத்து போலிசில் புகார் தந்ததையடுத்து அவர் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்றபோது இந்த தகவல் தெரிந்துள்ளது.

ரேகா உதயனபாலகன், யாத்ராமொழி போன்ற படங்களிலும், மாயம்மா உட்பட மலையாள சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.