லஞ்ச ஊழல் மோசடி விசாரணைகளை துரிதப்படுத்த ஜனாதிபதி கவனம்

லஞ்ச ஊழல் மோசடி விசாரணைகளை துரிதப்படுத்துவது குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.

இது தொடர்பிலான விசாரணைகளை கண்காணிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் கூட்டு எதிர்க்கட்சி ஆகியனவற்றை உள்ளடக்கி விசேட குழுவொன்று நிறுவப்படவுள்ளது.

இவ்வாறு குழு ஒன்றை அமைத்து விசாரணைகளை நடாத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நடைபெற்ற அரசியல் கலந்துரையாடல்களின் போது இது பற்றி பேசப்பட்டுள்ளது.

ஊழல் மோசடி தொடர்பிலான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து இந்தக் குழு ஆராயவுள்ளது.

அமைச்சர்களான ராஜித சேனாரட்ன, சம்பிக்க ரணவக்க ஆகியோர் தொடர்பிலான விசாரணைகள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இந்தக் கேள்விகளுக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க பதிலளித்துள்ளார்.

எனினும் இந்த பதில்களில் திருப்தி அடையாது அமைச்சரவையின் சில உறுப்பினர்கள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பியதனால், தனியான குழு ஒன்றை நியமித்து விசாரணைகள் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.