பிரதமர் நரேந்திர மோடி பற்றி நீங்கள் அறிந்திராத பல வியக்கத்தக்க உண்மைகள்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி பற்றி நீங்கள் அறிந்திராத பல வியக்கத்தக்க தகவல்கள் இங்கு கூறப்பட்டுள்ளன!

இந்திய தேசிய தலைவர்களுள் ஒரு தலை சிறந்த நிர்வாகியாக திகழ்பவர் பிரதமர் நரேந்திர மோடி. எந்த அரசியல் பின்புலமும் இல்லாது தானே முன்னேறியவர். குஜராத்தின் அசைக்க முடியாத முதல்வராக இருந்த நரேந்திர மோடி அவர்கள், அந்த மாநிலத்தை தொழில்துறையில் முதன்மை மாநிலமாக திகழ வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி நீங்கள் இதுவரை அறிந்திராத அறிய விஷயங்கள்

சிறு வயது முதலே சமூக வேலைகளிலும், அரசியல் மீதும் அதீத பற்றும், ஆசையும் கொண்டவர் நரேந்திர மோடி அவர்கள். அகமதாபாத் நகரில் டீ கடை வைத்து சில ஆண்டுகள் நடத்திக் கடின உழைப்பைக் கற்றுக்கொண்டவர். இவருக்கு தொழில்நுட்பத்தின் மீது தீராத மோகம் உண்டு. ஒரு நாட்டின் உயர்வும், தாழ்வும் தொழில்நுட்பத்தின் கையில் தான் இருக்கிறது என தெரிந்து வைத்திருப்பவர் நரேந்திர மோடி அவர்கள்.

ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கிய கொடூர சம்பவத்திற்கு வித்திட்ட ஹிட்லர் பற்றிய அரிய விஷயங்கள்!

நிர்வாக திறனும் , தொழிநுட்ப அறிவும் உடைய ஒரு சில சிறந்த உலக தலைவர்களுள் நரேந்திர மோடி அவர்களும் ஒருவர். அனைத்து வகையிலுமான அப்டேட்களையும் விரல் நுனியில் வைத்திருக்கும் நரேந்திர மோடி அவர்கள் பற்றி நீங்கள் அறிந்திராத வியக்கத்தக்க தகவல்கள் பலவன இருக்கின்றன….

கவிஞர்

குஜராத்தி மொழியில் நன்கு கவிதை எழுதும் திறமைக் கொண்டவர் நரேந்திர மோடி. இவர் சில புத்தகங்களும் வெளியிட்டிருக்கிறார்.

புகைப்பட கலைஞர்

புகைப்படம் எடுப்பதிலும் ஆர்வம் கொண்டவர் நரேந்திர மோடி அவர்கள். இவர் “க்ளிக்கிய” புகைப்படங்கள் வைத்து கண்காட்சியும் வைத்துள்ளார்.

யோகி

நரேந்திர மோடி அவர்கள் சிறு வயதிலேயே ஹிமாலயா சென்று இரண்டு வருடங்கள் அங்கிருந்த யோகிகளுடன் இருந்து நிறைய போதனைகள் எல்லாம் கற்று வந்திருக்கிறார்.

விவேகானந்தரின் ரசிகர்

நரேந்திர மோடி சுவாமி விவேகானந்தரின் தீவிர ரசிகர் ஆவார்.

தேசப்பற்று

1965 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த போரின் போது அங்கு இருந்த நமது நாட்டு வீரர்களுக்கு தன்னார்வ ஊழியராக பணியாற்றி இருக்கிறார்.

சமூக சேவை

அடுத்து 1967ஆம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட ஒரு வெள்ளத்தின் போது பாதிப்படைந்த மக்களுக்கு நேரில் சென்று சேவை செய்துள்ளார் நரேந்திர மோடி அவர்கள்.

அமெரிக்காவில் படித்தவர்

பொது உறவு (Public Relation) மற்றும் தன்னிலை மேலாண்மை (Image Management) பற்றிய மூன்று மாத படிப்பை அமெரிக்காவில் படித்து வந்துள்ளார் நரேந்திர மோடி

தீய பழக்கம் இல்லாதவர்

நரேந்திர மோடி அவர்களுக்கு புகை, மது போன்ற எந்த தீய பழக்கங்களும் இல்லை. இவர் சுத்த சைவம்.

திருமணம்

இவர் பிரம்மச்சாரி என பலரும் நினைத்து வந்தனர். ஆனால் இவருக்கு இளம் வயதிலேயே அவரது பெற்றோரினால் திருமணம் செய்து வைக்கப்பட்டது. பின்பு இவர் சமூக வேலைகளிலும், அரசியல் பணியிலும் ஆர்வம் கொண்டிருந்தமையால் தனித்து வாழ தொடங்கிவிட்டார்.

சுறுசுறுப்பு

இவர் ஒரு நாளுக்கு அதிகபட்சம் 5 மணி நேரம் தான் உறங்குவாராம். அதிகாலை 5.30 மணியளவில் எழுந்துவிடுவாராம்.

நரேந்திர மோடி உடுத்தும் உடை

நரேந்திர மோடி அவர்கள் உடையில் மிகவும் ஆர்வம் கொண்டவர். ஆனால், இதில் என்ன வியப்பு என்றால் இவர் உடுத்தும் அனைத்து உடைகளும் அகமதாபாத்தில் உள்ள ஜடே ப்ளூ (Jade Blue) என்ற துணி ஆலையில் தயாரிக்கப்படுவது மட்டும் தான்.

தாயிடம் ஆசீர்வாதம்

எங்கு பிரச்சாரம் செய்ய சென்றாலும், முக்கியமான அலுவலக வேலை அல்லது மீட்டிங் சென்றாலும் அவரது தாயிடம் ஆசீர்வாதம் வாங்கிய பின்பு தான் செல்வார் நரேந்திர மோடி.

பெண்கள் மீது மரியாதை

பெண்கள் தான் மிக பெரிய சக்தி அவர்களை வீணடித்துவிட கூடாது என கொள்கை கொண்டுள்ளவர் நரேந்திர மோடி அவர்கள். பெண்கள் மீது மட்டற்ற மரியாதை கொண்டவரும் கூட.

திரையுலக நண்பர்கள்

தனிப்பட்ட வாழ்க்கையில் அமிதாப் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் நரேந்திர மோடியின் நெருங்கிய திரையுலக நண்பர்கள் ஆவார்கள்

ட்விட்டர் நாயகன்

சமூக வலைதளங்களின் முக்கித்துவத்தை அறிந்தவர் நரேந்திர மோடி அவர்கள். தினமும் அதில் தனது வேலைகள் குறித்தும் செயல்பாடு குறித்தும் பதிவிறக்கம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். அரசியல் தலைவர்களுள் நிறைய ஆதரவாளர்கள் கொண்ட ட்விட்டர் பதிவு வைத்திருப்பவர் நரேந்திர மோடி ஆவார்.