கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா மருத்துவமனையில்…

இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா மருத்துவமனையில் படுக்கையில் இருக்கும் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

நியூசிலாந்துக்கு எதிராக கடந்த 9ம் தேதி நடந்த ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீரர் ரோகித் சர்மாவுக்கு தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது.

இதற்காக ரோகித் சர்மா லண்டன் செல்ல உள்ளதாகவும், மூன்று மாதம் ஓய்வில் இருக்கப் போகிறார் எனவும் இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

இதன்படி லண்டன் சென்ற ரோகித் சர்மாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இந்நிலையில் அறுவை சிகிச்சைக்கு பின்னர், படுக்கையில் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்த டுவிட்டில், எல்லாம் சிறப்பாக நடந்தது, உங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி, திரும்பி வர இன்னும் காத்திருக்க முடியாது என தெரிவித்துள்ளார்.