தீவிர சிகிச்சைப் பிரிவில் முதல்வர் மீண்டும் அனுமதி: டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை

தனி வார்டில் இருந்த முதல்வர் மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

முதல்வர் ஜெயலலிதா திடீர் உடல்நலக் குறைவு காரண மாக கடந்த செப்டம்பர் 22-ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலை யில் உள்ள அப்போலோ மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். லண்டன் டாக்டர், எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவினரின் ஆலோ சனையின்படி அப்போலோ மருத்துவமனை மூத்த டாக்டர்கள் முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருந்து வந்துள்ள பெண் பிசியோதெரபி நிபுணரும் முதல்வருக்கு தொடர்ந்து பிசியோ தெரபி சிகிச்சை அளித்து வருகி றார். அவர் இயற்கையாகவே சுவாசிக்கத் தொடங்கியதால், அவருக்கு பொருத்தப்பட்டிருந்த செயற்கை சுவாச கருவிகள் அகற்றப்பட்டன.

ஆனால் அவசர தேவைக்காக அவருடைய தொண்டை பகுதி யில் பொருத்தப்பட்டிருந்த டிரா கோடமி கருவி மட்டும் அகற்றப் படவில்லை. உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த முதல்வர் தனி வார்டுக்கு (விஐபி வார்டு) மாற்றப்பட்டார். இந்நிலையில் முதல்வருக்கு அவ்வப்பொழுது செயற்கை சுவாசம் தேவைப் படுவதால், அவர் மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.