உடலில் ஆங்காங்கே சிவப்பு புள்ளிகளா? என்ன காரணம்

பொதுவாக நமது உடம்பில் ஏதேனும் நோய்கள் ஏற்படுவதற்கு முன்பு ஒருசில அறிகுறிகள் தென்படும்.

அந்த அறிகுறிகளை கவனித்தில் கொள்ளாமல் விடும் போது பெரிய அளவிலான ஆபத்துகளை ஏற்படுத்திவிடுகிறது.

நமது உடம்பில் தோன்றும் சிறிய அளவு அறிகுறிகளான மச்சம், மருக்கள் மற்றும் சிவப்பு புள்ளிகள் போன்றவை எந்தக் காரணத்தினால் தோன்றுகிறது என்பது பற்றி தெரிந்துக் கொள்வோம்

நமது உடம்பில் சிவப்பு புளிகள் தோன்ற என்ன காரணம்?

நமது சருமத்தில் தோன்றும் சாதாரண சிவப்பு நிறப்புள்ளிகள் 40 வயதிற்கு மேற்பட்டவர்களிடம் அதிகமாக தென்படுகிறது.

இந்த சிவப்பு நிறமுள்ள புள்ளிகள் ஆங்கிலத்தில் ரூபி பாயின்ட் என்று கூறப்படுகிறது.

நம் உடம்பின் ரத்த நாளங்களின் சிஸ்டத்தில் ஏற்படும் செயல்திறன் குறைபாடு காரணத்தினால், சிவப்பு புள்ளிகள் ஏற்படுகிறது.

இந்த சிவப்பு புள்ளிகள் நமது உடம்பின் தோள்பட்டை மற்றும் மார்புப் பகுதிகளில் அதிகமாக தோன்றுகிறது.

மேலும் ஆசிய கண்டதை விட, மேற்கத்திய நாடுகளில் வசிக்கும் மக்களிடையே, உடம்பில் ஏற்படும் சிவப்பு புள்ளி அதிகளவில் காணப்படுகிறது.

எனவே இதற்கான தீர்வுகள் லேசர் சிகிச்சைகள் மூலம் அளிக்கப்படுகின்றது.