தோற்றது ஹிலாரி அல்ல ஒபாமா! கறுப்பின தலைவனின் சரித்திரத்தை புதைத்த வெள்ளையர்கள்!

உண்மையில் அமெரிக்காவில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் தோற்றது ஹிலாரி அல்ல, ஒபாமா என்பதே உண்மை.

குறிப்பாக முதலாளித்து நாட்டை இனி முதலாளித்துவமே ஆள வேண்டும் என அமெரிக்கா துடிப்பு மிகு வெள்ளையனின் வீழ்ந்தது ஒபாமா மட்டுமல்ல கறுப்பினத்தின் வரலாறும்தான்.

முதலாளித்துவம் ஆள வேண்டும் என்பதனை விட இனியொரு கறுப்பின தலைவன் வந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக அமெரிக்க வெள்ளையர்கள் இருக்கின்றார்கள், என்பதே இத்தேர்தலின் வெளிப்பாடாகும்.

ஹிலாரி வெற்றிப்பெற்றால் அவர் ஒபாமாவின் ஆதரவின் பேரிலே வெற்றிப்பெற்றார் என்றே வரலாறு சொல்லும்.

அரசியல் பின்புலம் இல்லாத ஒருவர் ஜனாதிபதியாகியிருக்கின்றார் என்றால் இதன் பின்னணியில் கறுப்பின கை ஓங்குவதனை அழிக்க வேண்டும் என திட்டமிட்டு கொண்டுவரப்பட்ட முடிவே இது.

டிரம்ப்-ன் இந்த வெற்றி முழுக்க முழுக்க வெள்ளை இனத்தவர்களின் ஆதரவாலும், பாரம்பரிய அமெரிக்கர்களின் ஆதரவாலும் மட்டுமே கிடைத்துள்ளது. அமெரிக்கர்கள் தங்களுக்கான அமெரிக்காவை அடைய தனக்கான அதிபரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

ஹிலரியை விட ட்ரம்ப் 1.5 லட்சம் வாக்குகள் குறைவாகவே பெற்றிருக்கிறார். ஹிலரி 59,923,027 வாக்குகளையும், ட்ரம்ப் 59,692,974 வாக்குகளையும் பெற்றிருக்கிறார்கள். ஆனால் எலக்டோரல் காலேஜ் என்று சொல்லப்படும் மாகாண வேட்பாளர்களின் வாக்குகளில் 279 எலக்டோரல் காலேஜ் வாக்குகள் ட்ரம்பால் கைப்பற்றப்பட்டதால், அவரது வெற்றி உறுதியானது.

வெறுமனே சாதாரன பின்புலத்தினை கொண்டவரே ரோனால்ட் ட்ரம்ப்…..

குறிப்பாக 70 வயதான ட்ரம்ப் 1987ம் ஆண்டில் குடியரசுக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார் என்றாலும் 1999ம் ஆண்டு அதில் இருந்து வெளியேறினார். பின்னர், 2009ம் ஆண்டில் மீண்டும் குடியரசுக் கட்சியில் இணைந்து 2011ம் ஆண்டு வரை அதில் நீடித்தார்.

1987ம் ஆண்டிற்கு முன்னர் ஜனநாயகக்கட்சியிலும் டொனால்ட் ட்ரம்ப் இணைந்து பணியாற்றியுள்ளார். இதனிடையே 1999 முதல் 2001 வரை சீர்திருத்தக் கட்சியிலும் இணைந்து ட்ரம்ப் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில்தான், 2012ம் ஆண்டு குடியரசுக் கட்சியில் மீண்டும் சேர்ந்த ட்ரம்பிற்கு 2015ம் ஆண்டு குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து தேர்தல் களத்தில் ஜனநாயகக்கட்சியின் ஹிலாரி கிளிண்டனைத் தோற்கடித்து இன்று 45வது அதிபராக அமெரிக்காவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் டொனால்ட் ட்ரம்ப்.

ஹிட்லரின் சாயலை மறைமுகமாக கொண்டுள்ள ரொனால்ட் ட்ரம்பின் எதிர்கால நடவடிக்கைகள் இனி எப்படி அமையப்போகிறது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் கறுப்பினத்தவருக்கு என்ன நடக்கப்போகின்றது என்பது கறுப்பினத்தவருக்கும் ஒபாமாவிற்கும் மட்டுமே தெரியும்.

தோற்றது ஹிலாரி அல்ல… கறுப்பினம் ..வென்றது ட்ரம்ப் அல்ல வெள்ளையினம்..