டிரம்பை வெறுக்கிறோம்…அவர் எங்களின் ஜனாதிபதி கிடையாது: போராட்டத்தில் குதித்த மாணவர்கள்

நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 276 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளார்.

ஆனால், அமெரிக்காவில் நடத்தப்பட்ட பல்வேறு கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி, ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் தான் வெற்றி பெறுவார் என கூறப்பட்டது.

ஆனால் இந்த கருத்துக்கணிப்புகளை எல்லாம் தவிடுபொடியாக்கிய டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்றுள்ளார். இவரின் இந்த வெற்றி ஹிலாரி ஆதரவாளர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில் கலிபோர்னியாவில் அமைந்துள்ள Berkeley என்ற மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் 1,000 பள்ளி மாணவர்கள் பள்ளியின் வெளிப்புறத்தில் ஒன்று திரண்டு டொனால்ட் டிரம்ப் எங்களின் ஜனாதிபதி கிடையாது என கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இப்பள்ளியினை தொடர்ந்து பிற பள்ளி மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளி மற்றும் பல்கலைக்கழகத்தினை விட்டு வெளியேறிய இவர்கள், சாலையில் வழியாக அணியாக திரண்டு சென்று போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

Berenabas Lukas(15) என்ற மாணவி கூறியதாவது, டொனால்ட் டிரம்ப ஜனாதிபதியாக வெற்றி பெற்றுள்ளதால் எங்களின் பாதுகாப்பு குறைந்துள்ளதாக உணர்கிறோம். அவரை எங்களின் ஜனாதிபதியாக ஏற்றுக்கொள்ள முடியாது என கூறியுள்ளார்.

மேலும், டொனால்ட் டிரம்பை நாங்கள் வெறுக்கிறோம், அவர் எங்களின் ஜனாதிபதி கிடையாது என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.625-0-560-350-160-300-053-800-668-160-90-4 625-0-560-350-160-300-053-800-668-160-90-5 625-0-560-350-160-300-053-800-668-160-90-6