கோவில் பிரகாரத்தை சுற்றிய பிறகு தான் கருவறைக்கு செல்ல வேண்டுமா?

தெய்வத்தை வணங்கிய பிறகு, பிரகாரத்தைச் சுற்றுவது தான் நடைமுறையில் பழக்கமாக இருக்கிறது. ஆனால், பிரகாரத்தை சுற்றிய பிறகு தான் கருவறைக்குச் செல்ல வேண்டும் என்பதே நிஜமான நியதி.

ஏனெனில், பிரகாரங்களைச் சுற்றி வரும் போதும் மற்ற எண்ணங்களை எல்லாம் விட்டு, கருவறையில் சென்று தெய்வத்தை வணங்க வேண்டுமே என்ற எண்ணம் மட்டுமே நெஞ்சில் நிறைந்திருக்கும்.

இதன் தத்துவம் என்ன?

இந்த உலகில் எங்கே சுற்றினாலும் சரி… இறுதியில், நீ அடையப்போவது தெய்வத்தின் சன்னதியை என்பதையே குறிக்கிறது.